பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் 'சென்னை எக்ஸ்பிரஸ்'. இந்தப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கியிருந்தார்.
தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய முக்கிய தகவலை ரோஹித் ஷெட்டி வெளியிட்டுள்ளார். எஃப்எம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவரிடம் 'சென்னை எக்ஸ்பிரஸ் 2' படம் பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோஹித் ஷெட்டி, கார்த்திக் ஆர்யன், சாரா அலிகான் ஜோடி 'சென்னை எக்ஸ்பிரஸ் 2' படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும். இருவரும் இணைந்து நடித்துள்ள 'லவ் ஆஜ் கல்' படம் வெளியாவதற்கு முன்பே நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது. இருவரின் கெமிஸ்ட்ரியும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என தெரிவித்தார்.
முன்னதாக ரோஹித் ஷெட்டி இயக்கிய சிம்பா திரைப்படத்தில் சாரா அலிகான் நடித்திருந்த நிலையில், அடுத்த படமான 'சென்னை எக்ஸ்பிரஸ் 2'-விலும் சாரா அலிகானை நடிக்க வைக்க ரோஹித் ஷெட்டி தயாராகி வருகிறார்.