பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் 'சென்னை எக்ஸ்பிரஸ்'. இந்தப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கியிருந்தார். பாலிவுட் ஆக்ஷன் மசாலா படங்களுக்கு பெயர்பெற்ற ரோஹித் ஷெட்டி 'கோல்மால்', 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'சிங்கம்' உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.
மும்பையை பாதுகாக்க உதவிய ரோஹித்துக்கு நன்றி - மும்பை காவல் துறை - Rohit Shetty
கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் தங்குவதற்காக தனக்கு செந்தமாக மும்பையில் உள்ள 8 ஹோட்டல்களை இயக்குநர் ரோஹித் ஷெட்டி வழங்கியுள்ளார்.
![மும்பையை பாதுகாக்க உதவிய ரோஹித்துக்கு நன்றி - மும்பை காவல் துறை Rohit Shetty](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6905117-1075-6905117-1587629517540.jpg)
இந்நிலையில், கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினருக்கு மும்பையில் உள்ள தனக்கு சொந்தமான 8 ஹோட்டல்களை வழங்கியுள்ளார். ரோஹித் ஷெட்டியின் இந்த செயலுக்கு மும்பை காவல் துறை நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து மும்பை காவல் துறை தனது அதிகார்ப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மும்பை நகரம் முழுவதுமுள்ள தனக்கு சொந்தமான 8 ஹோட்டல்களை நமது கரோனா போராளிகள் ஓய்வெடுக்கவும் குளிக்கவும் உடைமாற்றவும் இரண்டு வேளை உணவு ஏற்பாட்டுடன் ரோஹித் ஷெட்டி வழங்கியுள்ளார். இந்த அன்பான உதவிக்கும் மும்பையை பாதுகாப்பதில் எங்களுக்கு உதவியதற்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.