தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரியா சக்ரபோர்த்திக்கு இன்ஸ்டாகிராமில் கொலை மிரட்டல் விடுத்த நெட்டிசன்! - ரியா சக்ரபோர்த்தி திரைப்படங்கள்

மும்பை: நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு (Rhea Chakraborty) சமூக வலைதள பக்கம் வாயிலாக பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்துவிடுவதாக வந்த அச்சுறுத்தலை அடுத்து, சைபர் கிரைம் பிரிவினரிடம் புகார் அளித்துள்ளார்.

ரியா சக்ரபோர்த்தி
ரியா சக்ரபோர்த்தி

By

Published : Jul 16, 2020, 7:38 PM IST

பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங், கடந்த ஜூன் 14-ஆம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது இல்லத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணம் தொடர்பாக, பாலிவுட்டில் பல பிரபலங்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் ஒருவராக சுஷாந்த் சிங்கின் தோழியும், காதலியுமான ரியா சக்ரபோர்த்தியிடமும் (Rhea Chakraborty) காவல்துறை விசாரணை மேற்கொண்டது. சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு ரியா தான் காரணமென ஒரு கும்பல் அவரது சமூக வலைதளப்பக்கத்தில் சென்று கடுமையாக சாடினர்.

இதன் காரணமாக, ரியா தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்கள் தெரிவிக்கும் பகுதியை முடக்கினார். தற்போது இதற்கெல்லாம் மேலாக நெட்டிசன் ஒருவர் ரியாவின் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரியா பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ரியா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றால், அவரை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தக் கொலை மிரட்டலை அடுத்து ரியா சைபர் கிரைம் பிரிவினரிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு நான்தான் காரணம் என பலர் என்னை குற்றம் சுமத்தினர். நான் ஒரு கொலைகாரி, நான் ஒரு கேடு கெட்டவள் என்றெல்லாம் கூறினீர்கள் அப்போது அமைதியாக இருந்தேன்.இப்போது நான் தற்கொலை செய்து கொள்ளாவிட்டால், நீங்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்வீர்கள் என்று கூறியிருப்பது, எனது மௌனத்தைக் அழைத்துள்ளது. இதுபோன்ற நச்சுத்தன்மையான கொலை மிரட்டல் யாருக்கும் வரக்கூடாது.

தயவுசெய்து இவர் மீது சைபர் க்ரைம் பிரிவு காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details