இந்தி, தெலுங்கு, கன்னடா ஆகிய மொழிப் படங்களில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளராக வலம்வருபவர் ராம் கோபால் வர்மா. எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் திரைப்படம், அரசியல், விளையாட்டு என அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டுவருகிறார்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு: படம் எடுக்கும் முயற்சியில் ஆர்ஜிவி! - சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு
ஹைதராபாத்: மறைந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு தொடர்பான படத்தை ராம் கோபால் வர்மா இயக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
RGV
இந்நிலையில் இவர், மறைந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு குறித்த படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.