தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அமேசான் ப்ரைமில் மீண்டும் தடம் பதிக்கும் 'ஷெர்னி' வித்யா பாலன்! - வித்யா பாலனின் படங்கள்

மும்பை: வித்யா பாலன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஷெர்னி' திரைப்படம் ஜூன் மாதம் அமேசான் ப்ரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sherni
Sherni

By

Published : May 17, 2021, 7:38 PM IST

அமித் மசுர்கார் இயக்கத்தில் வித்யா பாலன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஷெர்னி'. இந்தப் படத்தில் ஷரத் சக்ஸேனா, முகுல் சட்டா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை டி சீரிஸ் தயாரித்துள்ளது. மனிதர்களால் வனங்களுக்கும் வன விலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்தும்; அதைச் சரிசெய்ய நினைக்கும் நேர்மையான வன அலுவலர் பற்றியும் சொல்லும் படமாக 'ஷெர்னி' உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வன அலுவலராக வித்யா பாலன் நடித்துள்ளார்.

இந்தப் படம் குறித்தான அறிவிப்பை வித்யா பாலன் பிப்ரவரி மாதம், தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்திருந்தார். தற்போது இந்தப் படம் ஜூன் மாதம் முன்னணி ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.

இது குறித்து அமேசான் ப்ரைம் தனது ட்விட்டர் பக்கத்தில், "இவள் தனது தடத்தைப் பதிக்கத் தயாராக இருக்கிறார். 'ஷெர்னி'யை ஜூன் மாதம் சந்தியுங்கள்'' எனப் பதிவிட்டுள்ளது.

இதனுடன் படத்தின் போஸ்டரும் பதிவிடப்பட்டுள்ளது. அதில், வனத்துக்கு நடுவில் துப்பாக்கியின் குறியில் வித்யாபாலன் இருப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு கரோனா நெருக்கடி காரணமாக வித்யா பாலனின் 'சகுந்தலா தேவி' திரைப்படமும் அமேசான் ப்ரமைில் நேரடியாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details