தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அப்போவும், இப்போவும்! சோனாலியுடனான நட்பை விவரித்த ரவீணா - சினிமா செய்திகள்

அப்போதும், இப்போதும் எடுத்துக்கொண்ட இரு புகைப்படங்களுடன் நடிகை சோனாலியுனான தனது நினைவலையை பகிர்ந்துள்ளார் நடிகை ரவீணா டாண்டன்.

raveena tandon throback pictures
Raveena tandon reminisces shooting keemat with sonali bendre

By

Published : Jun 1, 2020, 5:13 PM IST

மும்பை: நடிகை சோனாலி பிந்த்ரேவுடனான தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார் நடிகை ரவீணா டாண்டன்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், பழைய நினைவலைகளுடன், அப்போதும் இப்போதும். நான் மற்றும் சோனாலி பிந்த்ரே. கீமத் பட போஸ்டரில் அசத்தலாக இருந்த நாங்கள் இருவரும் பிரபல நிகழ்சியில் சிரித்த முகத்தோடு இருக்கிறோம்.

மனதுக்கு விருப்பமான நினைவுகள். இந்தப் படத்தின் படபிடிப்பின்போது இனிமையாக பொழுதை கழித்தோம். குறிப்பாக, ஓ மேரே சைலா பாடல் இருதய பயிற்சிக்கான சிறந்த பாடல்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் ஹிட் படமான கீமத்-இல் அக்ஷய் குமார், சயீப் அலிகான் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். 1998ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை சமீர் மல்கான் இயக்கியுள்ளார்.

தமிழில் சாது, ஆளவந்தான் படங்களில் நடித்த ரவீணா டாண்டன், தற்போது கேஜிஎஃப் 2 படத்தில் நடித்து வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details