பாலிவுட் நடிகை ரவீனா மணாலியில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார். கரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகம் குவியும் மணாலியில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மணாலி: இரவு ஊரடங்குக்கு தயாரான ரவீனா - மணாலி
மணாலி படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கும் நடிகை ரவீனா, அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இரவு ஊரடங்குக்கு தயார் நிலையில் இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
![மணாலி: இரவு ஊரடங்குக்கு தயாரான ரவீனா Raveena Tandon](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9666134-24-9666134-1606323374563.jpg)
Raveena Tandon
இதுகுறித்து ரவீனா, மணாலியில் இருக்கும்போது அந்த மக்களைப் போலவே நடந்துகொள்ளுங்கள். இரவு ஊரடங்குக்கு தயார் நிலையில் உள்ளேன். இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு, 8 மணிக்கு மேல் இயற்கை கொஞ்சம் சுவாசிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.