நடிகர் நவாசுதீனின் மனைவி அஞ்சனா, வெர்சோவா காவல் நிலையத்தில் நவாஸ் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் ஏமாற்று வேலை செய்ததாக புகார் அளித்திருந்தார். இது தொடர்பான விசாரணை நடந்துகொண்டிருக்கும் வேளையில், நவாசுதீனின் சகோதரர் ஷமாஸ் அவருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார்.
நவாசுதீன் மீதான பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு பொய்: ஷமாஸ் சித்திக் - nawazuddin siddiqui fight with wife
நவாசுதீன் சித்திக் மீது அவரது மனைவி அஞ்சனா சுமத்தியுள்ள பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு பொய் என நவாசுதீனின் சகோதரர் ஷமாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நவாசுதீன் சித்திக் மீது அஞ்சனா சுமத்தியிருப்பது பொய் குற்றச்சாட்டு. அவர் கேட்ட 30 கோடி ரூபாயை தராததால் பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். அவரது பொய் குற்றச்சாட்டுகளால் எங்கள் குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மும்பை நீதிமன்றத்தை அணுகுவேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஷமாஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அஞ்சனா புகார் அளித்திருந்தார். ஷமாஸ் இது தொடர்பாக கேட்ட முன் ஜாமீனை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.