வில்லியம் ஷேக்ஸ்பியரின் 'தி காமெடி ஆஃப் எரர்ஸ்' (The Comedy Of Errors) என்ற நாவலை தழுவி ரோஹித் ஷெட்டி இயக்கி வரும் படம் 'சர்க்கஸ்' (Cirkus). இப்படத்தில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் நடிகைகள் பூஜா ஹெக்டே, ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.
சர்க்கஸ் படத்தில் ரன்வீர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்தாண்டு இறுதியில் இப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே ரன்வீர் சிங் சின்னத்திரையில், வினாடி வினா நிகழ்ச்சியான தி பிக் பிக்சர் என்னும் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்தநிலையில், ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நீராவி குளியலுக்கு பின் சட்டை இல்லாமல் துண்டை மட்டும கட்டிருக்கும் செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டார். வெள்ளை துண்டை சிக்ஸ் பேக்ஸ் என ரன்வீர் சிங்கின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் லைக்ஸ், ஹார்ட்டின்களை அள்ளி தெளித்து வந்தனர்.
அப்படி இருக்கையில், பூஜா ஹெக்டே, பம்மி பார்த்து துண்டு விழப்போகிறது என பதிவிட்டார். இந்த கருத்து தற்போது சமூகவலைதளத்தில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதையும் படிங்க: என் வொய்ஃபு படுஷார்ஃபு: நெகிழ்ந்துபோன ரன்வீர் சிங்