தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வரலாற்று நிகழ்வை மீண்டும் கண் முன் நிறுத்திய ரன்வீர் - 83 படத்தில் ரன்வீர் சிங்

இந்திய நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் கொண்டாடிய வரலாற்றுத் தருணமான, 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் வாங்கும் காட்சியை மீண்டும் கண்முன்னே நிறுத்தியுள்ளார் ரன்வீர் சிங்.

Ranveer Singh 83 movie latest update
Ranveer Singh gives sneak peek to Kabir Khan's 83

By

Published : Mar 7, 2020, 11:43 PM IST

மும்பை: '83' படத்துக்காக எடுக்கப்பட்ட, 1983ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையை பெறும் தருணத்தின் புகைப்படத்தை நடிகர் ரன்வீர் சிங் பகிர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக 1983ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பை வென்ற கதையை அடிப்படையாகக் கொண்டு '83' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் அப்போதைய கேப்டனாக இருந்த கபில் தேவ் வேடத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். கபில் தேவ் மனைவி கேரக்டரில் ரன்வீர் மனைவியும், நடிகையுமான தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

இதேபோல் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாடிய வீரர்களின் ஒருவரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் கோலிவுட் நடிகர் ஜீவா நடித்துள்ளார். கபீர் கான் இயக்கியிருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதையடுத்து, அப்போதைய இந்திய அணி கேப்டன் கபில் தேவ் பெற்றுக்கொண்ட வரலாற்றுத் தருணத்தை நினைவுபடுத்தியுள்ளார் ரன்வீர் சிங். '83' படத்தில் ரன்வீர் சிங் கோப்பையை பெறும் காட்சியின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

படம் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புகைப்படத்துக்கு லைக்ஸ் குவிந்ததுடன், ஏராளமானோர் ஷேர் செய்துள்ளனர். உலகக்கோப்பையை முதல் முறையாக பெற்ற பின், அதை தூக்கிப்பிடித்தபடி சிரித்த முகத்தோடு கபில்தேவ் கொடுத்த போஸ் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நீங்காத நினைவாக இருக்கிறது. தற்போது அதை கண்முன்னே நிறுத்தும் விதமாக ரன்வீர் பதிவிட்டுள்ள இந்தப் புகைப்படம் பழைய நினைவலைகளை மீண்டும் கொண்டுவந்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details