தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

”மனிதம் குறித்து இந்தக் கதாபாத்திரங்களால் நிறைய கற்றுள்ளேன்” - ராணி முகர்ஜி - மர்டானி

பிளாக், ஹிச்கி திரைப்படங்களில் நடித்ததன் மூலம், தான் மனிதம் குறித்து நிறைய கற்றுள்ளதாக நடிகை ராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.

ராணி முகர்ஜி
ராணி முகர்ஜி

By

Published : Dec 4, 2020, 11:02 PM IST

தன் திருமணத்திற்குப் பிறகும் பாலிவுட்டில் ஹீரோயின்-செண்ட்ரிக் திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை நடிகை ராணி முகர்ஜி இன்றளவும் தக்க வைத்துள்ளார்.

பிளாக், மர்டானி 1, தில் போலே ஹடிப்பா, நோ ஒன் கில்ட் ஜெஸிகா உள்ளிட்ட கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ள ராணி முகர்ஜி, தனது திருமணத்திற்குப் பின்பும் மர்டானி 2, ஹிச்கி எனத் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்து வருகிறார்.

தற்போது ப்ளாக், ஹிச்கி திரைப்படங்களில் தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் குறித்து ராணி நினைவுகூர்ந்துள்ளார். ”ப்ளாக் படத்தின் சிறப்புத் திறன் கொண்ட மிஷெல் மெக்நல்லி, ஹிச்கி திரைப்படத்தில் ’டூரெட் சிண்ட்ரோம்’ கொண்ட நைனா மாதூர் ஆகிய உணர்வுப்பூர்வமான பாத்திரங்களை ஏற்று நடித்ததன் மூலம் நான் மனிதம் குறித்து நிறைய கற்றுள்ளேன். இந்தப் படங்கள் என்னை மேம்பட்ட மனிதராக மாற்றிக்கொள்ள உதவியுள்ளன. சஞ்சய் லீலா பன்சாலி, சித்தார்த் பி.மல்ஹோத்ரா ஆகியோரின் படங்களில் தோன்றியது என் அதிர்ஷ்டம். சமூகத்தில் அனைவரையும் சமமாக நடத்தத் தூண்டும் வகையில் இந்தப் படங்கள் தேவையான உரையாடல்களை முன்னெடுத்துள்ளன என நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

"இந்த நாட்டின் குடிமக்கள் என்ற வகையில், நாம் அனைவரும் ஒருங்கிணைவு, சமத்துவம் ஆகியவை குறித்த உரையாடல்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். இதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். இந்தக் கதாபாத்திரங்களுக்கு இந்தப் படங்களில் இழைக்கப்படும் பாகுபாடுகள்போல், நிஜ வாழ்வில் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் நாம் ஒவ்வொருவரும் குரல் எழுப்ப வேண்டும்” என்றும் ராணி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details