தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

செல்வாக்குமிக்க சினிமா ஆளுமை விருது பெற்ற கமல் பட நடிகை - ஹேராம்

தென்-கிழக்கு ஆசிய சினிமாவின் செல்வாக்கு மிக்க சினிமா ஆளுமை விருதை நடிகை ராணி முகர்ஜி பெற்றுள்ளார்.

rani-mukerji-bags-most-influential-cinema-personality-award

By

Published : Nov 9, 2019, 2:44 PM IST

2018ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி நடிப்பில் ஹிச்கி திரைப்படம் வெளியானது. பள்ளி ஆசிரியராக ராணி முகர்ஜி நடித்திருந்த இப்படம் மாபெரும் வெற்றிபெற்று உலக அளவில் 250 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்திருந்தது.

இதனிடையே ஹிச்கி படத்திற்காக செல்வாக்கு மிக்க சினிமா ஆளுமை விருதை ராணி முகர்ஜி பெற்றிருக்கிறார்.

நடிகை ராணி முகர்ஜி

இது குறித்து பேசிய அவர், என்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களுக்காக குரல் கொடுப்பது என்பதை எனது கடமையாக நினைத்தேன். பேச்சுத்திணறல் பாதிப்பால் அவதிப்படும் ஒருவர் ஆசிரியராக தனது பணியை எவ்வாறு செய்துகாட்டியிருக்கிறார் என்பதை திரையில் பேசியிருக்கும் படம் ஹிச்கி. சிறந்த கதையம்சம் கொண்ட படங்களுக்கு உலகில் எப்போதுமே தனித்துவமான வரவேற்பும் அங்கீகாரமும் இருக்கும் எனக் கூறியுள்ளார்.

ராணி முகர்ஜி கமல்ஹாசனின் ஹேராம் திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...

கொல்கத்தா திரைப்பட விழாவை தொடங்கி வைத்த பாலிவுட் பாட்ஷா!

ABOUT THE AUTHOR

...view details