நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,44,786 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,08,99,394 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். மேலும், 1,57,930 பேர் உயிரிழந்துள்ளனர்.