பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் ரோனி க்ரூவிலா, சிறிய பட்ஜெட்டில் தொடர்ச்சியாகப் படங்களைத் தயாரிக்க முடிவுசெய்துள்ளார். அவ்வாறு அவர் தயாரிக்கும் படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆணுறை பரிசோதனை செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஆணுறை தயாரிக்கும் நிறுவனங்கள் புதிய வகை ஆணுறையை அறிமுகப்படுத்தும் வகையில் இளம்பெண்களை வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் அந்தப் புதிய ஆணுறையின் செயல்திறனைச் சோதித்துச் சொல்ல வேண்டும். இப்படியொரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.
இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் உருவாகிவருகிறது. இப்படத்தை தேஜஸ் பிரபா விஜய் தியோஸ்கர் இயக்கிவருகிறார். இப்படத்திற்கு 'சத்ரிவாலி' எனப் பெயர்வைக்கப்பட்டுள்ளது.
இப்படம் குறித்து தேஜஸ் பிரபா விஜய் தியோஸ்கர் கூறுகையில், "சத்ரிவாலி ஒரு சமூக குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படம். கர்னால் என்ற சிறிய நகரத்தில் வசிக்கும் வேலையில்லாத வேதியியல் பட்டதாரி ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. இது முழுக்க முழுக்க நகைச்சுவையைக் கொண்டதாக இருக்கும்.
இப்படத்திற்காக ரகுல் தன்னைத்தானே செதுக்கிவருகிறார். ஒவ்வொரு கதாபாத்திரம் அவருக்கு புதுமையானதாக அமைகிறது. இப்படத்தை மக்கள் நிச்சயம் ரசிப்பார்கள்" என்றார்.
தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங் கூறுகையில், இது மிகவும் சுவாரஸ்யமான வித்தியாசமான கதையம்சத்தைக் கொண்டது. இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
இதையும் பாருங்க: ரட்சிக்கும் 'ராட்சசி' ரகுல் பிரீத் சிங் போட்டோஷூட்