தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'கனவு நனவானது': அஜய் தேவ்கன் - அமிதாப் கூட்டணியில் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்! - அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன் - அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கவுள்ள 'மே டே' படத்தில் நயாகியாக ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ajay
ajay

By

Published : Nov 20, 2020, 5:08 PM IST

நடிகர்கள் அஜய் தேவ்கன், அமிதாப் பச்சன் இருவரும் இணைந்து ’மேஜர் சாப்’, ’காக்கி’, ’சத்தியாகிரகா’ ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இதையடுத்து தற்போது இந்த வெற்றி கூட்டணி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது.

அஜய் தேவ்கன் தயாரித்து இயக்கி நடிக்கவுள்ள திரைப்படம் 'மே டே'. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில் அஜய் தேவ்கன் பைலட் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த படத்தில் நயாகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து ரகுல் ப்ரீத் சிங் கூறியிருப்பதாவது, "கடந்த காலங்களில் அஜய் தேவ்கனுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இந்த படத்தில் அவருடன் சக பைலட்டாக நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த படத்தில் அஜய் தேவ்கன் என் சக நடிகர் மட்டுமல்லாது என இயக்குநரும் தான். எல்லா நடிகர்களையும் போலவே எனக்கும் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என கனவு இருந்தது. அது தற்போது இந்த படத்தின் மூலம் நனவாகியுள்ளது" என்று கூறினார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் இறுதியில் ஆரம்பமாகும் என தெரிகிறது.

ABOUT THE AUTHOR

...view details