ஜப்பானில் வெளியான ஷ்ரத்தா கபூரின் 'Stree'
மும்பை: ஷ்ரத்தா கபூர் - ராஜ்குமார் ராவ் நடிப்பில் உருவாகிய 'Stree'திகில் நகைச்சுவை திரைப்படம் ஜப்பானில் திரையிடப்பட்டது.
அமர் கௌஷிக் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு ராஜ்குமார் ராவ் - ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியான திரைப்படம் Stree. சந்தேரி கிராம மக்களையும் அங்கு நடைபெறும் திருவிழா இரவில், ஒரு பெண்ணின் ஆவி ஆண்களைத் தாக்கும் திகில் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாக்கப்பட்டது.
இப்படத்தில், பங்கஜ் திரிபாதி, அபர்ஷக்தி குரானா, மற்றும் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தற்போது இப்படம் ஜப்பானில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஷ்ரத்தா கபூர் தனது சமூக வலைதள பக்கத்தில், 'Stree' ஜப்பானில் இன்று முதல் வெளியாகிறது. ஜாக்கிரதை என பதிவிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் மத்தியில் ஜப்பானில் மே மாதம் நடுப்பகுதியில் அங்கிருந்த திரையரங்குகளை திறக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனை அடுத்து ஜப்பானில் உள்ள திரையரங்குகளில் பென்-ஹர் (1959), ஈஸ்ட் ஆஃப் ஈடன் (1955), போனி அண்ட் கிளைட் (1969), தி டவரிங் இன்ஃபெர்னோ (1974) போன்ற பழைய ஹாலிவுட் கிளாசிக் திரைப்படங்களுடன் திரையிடத் தொடங்கியது.