மும்பை: லூடோ படத்தில் பெண் கேரக்டரில் தோன்றும் நடிகர் ராஜ்குமார் ராவ், அந்த கேரக்டரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்தை அனுராக் பாசு இயக்குகிறார். டார்க் காமெடி பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் அபிஷேக் பச்சன், ராஜ்குமார் ராவ், ஆதித்யா ராய் கபூர், தங்கல் புகழ் ஃபாத்திமா சனா ஷேக், பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தில் கேமியோ கேரக்டரில் ரன்பீர் கபூர் தோன்றுகிறார்.
இதையடுத்து தனது காதலியுடன் ஸ்விட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருக்கும் ராஜ்குமார் ராவ், படத்திலிருந்து தனது கேரக்டர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட் அளித்துள்ளார்.