தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஊடக சர்ச்சைக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லை - நடிகை ஷில்பா ஷெட்டி - ஷில்பா ஷெட்டியின் படங்கள்

மும்பை: ஆபாசப் பட விவகாரத்தில் கைதான ராஜ் குந்த்ராவின் வழக்கில், தன்னையும் தனது குழந்தைகளையும் தொடர்புபடுத்தாதீர்கள் எனக்கூறி ஷில்பா ஷெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Shilpa Shetty
Shilpa Shetty

By

Published : Aug 3, 2021, 8:42 PM IST

ஆபாசப் படங்களை எடுத்து சில மொபைல் செயலிகளில் வெளியிட்டதாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழில் அதிபருமான ராஜ் குந்த்ராவை மும்பை காவல் துறையினர் ஜூலை 19ஆம் தேதி கைது செய்தனர்.

இதுதொடர்பாக, ராஜ் குந்த்ராவின் மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டியிடம் அவரது வீட்டிற்குச் சென்று காவல் துறையினர் சோதனையும் விசாரணையும் மேற்கொண்டனர். கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் இந்த விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஷில்பா ஷெட்டி தனது சமூக வலைதளப்பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஷில்பா ஷெட்டி

அதில், 'கடந்த சில நாள்களாக எல்லாப் பக்கமும் சவால் மிகுந்ததாக இருந்தது. ஏராளமான வதந்திகளும் குற்றச்சாட்டுகளும் வலம் வந்தன. ஊடகங்களாலும் சில போலியான நலம் விரும்பிகளாலும் ஆதாரமற்ற தாக்குதல்கள் என் மீது தொடுக்கப்பட்டன.

ஷில்பா ஷெட்டி

ஏராளமான கேலிகளும் கேள்விகளும் பதிவிடப்பட்டன. என் மீது மட்டுமின்றி என் குடும்பத்தினர் மீதும். ஆனால், அவை குறித்தும் இன்னும் நான் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், தொடர்ந்து இது குறித்து எதுவும் நான் கூறப்போவதில்லை.

ஷில்பா ஷெட்டி

எனவே, என் மீது தவறான பழி சுமத்துவதை நிறுத்துங்கள். மீண்டும் சொல்கிறேன். ஒரு நடிகையாக என்னுடைய கொள்கை புகார் சொல்ல கூடாது; விளக்கம் சொல்லக் கூடாது என்பதே. நான் சொல்வதெல்லாம் ஒன்று தான்.

ஷில்பா ஷெட்டி

விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மும்பை காவல் துறை, இந்திய நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு குடும்பமாக எங்களால் இயன்ற அனைத்து சட்டப்பூர்வமான வழிகளையும் முயன்று கொண்டிருக்கிறோம்.

ஷில்பா ஷெட்டி

ஆனால், ஒரு தாயாக நான் உங்களிடம் பணிவுடன் கேட்டுக்கொள்வது இதுதான். எங்களுடைய குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு கொடுங்கள். ஒரு விஷயத்தின் உண்மை தன்மையை ஆராயாமல், அதுகுறித்து கருத்து கூறாதீர்கள்.

ஷில்பா ஷெட்டி

நான் சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகள். கடந்த 29 ஆண்டுகளாக கடினமாக ஒரு பெண். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நான் அவர்களுடைய நம்பிக்கையை வீணடிக்க மாட்டேன்.

ஷில்பா ஷெட்டி

மிக முக்கியமாக இந்தத் தருணத்தில் என்னுடைய, என் குடும்பத்தின் தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்குமாறு பணிவுடன் உங்களை கேட்டுக்கொள்கிறேன். ஊடக சர்ச்சைக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லை. சட்டம் அதன் கடமையை சரியாக செய்ய வழி விடுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஷில்பா ஷெட்டி

இதையும் படிங்க: அவதூறு வழக்கு: பெயர் கெட்டு போச்சு...நஷ்ட ஈடு கேட்கும் ஷில்பா ஷெட்டி!

ABOUT THE AUTHOR

...view details