தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அக்‌ஷய் குமாரின் 'லட்சுமி' ஓடிடி தளத்தில் புதிய சாதனை - லட்சுமி புதிய சாதனை

மும்பை: அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான 'லட்சுமி' திரைப்படம் ஓடிடி தளத்தில் அதிகம் பேர் முதல் காட்சியாக பார்த்துள்ளதாக புதிய சாதனை படைத்துள்ளது.

akshay
akshay

By

Published : Nov 10, 2020, 4:47 PM IST

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து, தயாரித்து கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'காஞ்சனா'. இந்தத் திரைப்படம் தற்போது அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி நடிப்பில் இந்தியில் 'லட்சுமி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தத் திரைப்படத்தை லாரன்ஸே இயக்கியிருந்தார்.

கரோனா நெருக்கடி காரணமாக இந்தத் திரைப்படம் திரையரங்கில் வெளியாகமல் ஓடிடி தளமான டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் நவம்பர் 9ஆம்தேதி வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே ஃபுர்ஜ் கலீஃபா பாடலும் பாம் போலே பாடலும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

இந்தத் திரைப்படத்தின் முதல் காட்சியை மில்லியன் கணக்கனோர் கண்டுகளித்தையடுத்து ஓடிடி தளத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது.

இந்தத் திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. இத்திரைப்படம் வெளியாகும் முன்பு லாரன்ஸ் தனது சமூகவலைதளப்பக்கதில், அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி உள்ளிட்ட படக்குழுவினருக்கு தனது நன்றிகளை தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும்விதமாக அக்‌ஷய் குமார், நீங்கள் இல்லாமல் இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தை என்னால் செய்திருக்க முடியாது எனத் தெரிவித்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details