உலகை உலுக்கிவரும் கரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து உத்தரபிரதேசத்தில் ஒன்பது பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் ஒருவர் பிரபல பின்னணி பாடகி கனிகா கபூர் ஆவார். சன்னி லியோனின் புகழ்பெற்ற பாடலான ‘பேபி டால்’ பாடலை பாடியவர் இவர்தான்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பின்னணி பாடகியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகர்
உத்தரப் பிரதேசத்தில் கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நான்கு பேரில் ஒருவர் பிரபல பின்னணி பாடகி கனிகா கபூர் ஆவார்.
சமீபத்தில் லண்டனில் இருந்து லக்னோவுக்கு திரும்பிய கனிகா, மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளாமல் பல விழாக்களில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நெட்டிசன்கள் அவரை சகட்டுமேனிக்கு வசைபாடுகின்றனர்.
இதுகுறித்து கனிகா, என்னை விமான நிலையத்தில் சோதனை செய்தனர். அப்போது எனக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவில்லை. சாதாரண காய்ச்சல் இருப்பதாகதான் தெரிவிக்கப்பட்டது. தற்போது தனிமைப்படுத்தப்பட்டு முறையான சிகிச்சை பெற்று வருகிறேன். மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி அனைவரும் முறையான சோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.