கபீர் கான் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவான படம் ஏக் தா டைகர். சல்மான்கான் நடிப்பில் உருவான படங்கள் பெரும் வரவேற்பு பெற்ற படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தில் சல்மானுடன் கத்ரினா கைஃப், ரன்வீர் ஷோரே, கிரிஷ் கர்னாட், லோஷன் சேஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'டைகர் ஜிந்தா ஹே' என்ற படத்தை அலி அப்பாஸ் ஷேஃபர் இயக்கியிருந்தார். இப்படம் முதல் பாகம் அடைந்த வசூல் சாதனை விட, அதிக வசூலில் சாதனை புரிந்தது. தற்போது இப்படத்தின் மூன்றாம் பாகம் தயாரிக்க யாஷ் ராஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
'டைகர் 3'படத்தை மனிஷ் சர்மா இயக்க உள்ளார். விரைவில் யாஷ்ராஜ் நிறுவனம், தனது 50ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு பல்வேறு புதிய படத்தின் தயாரிப்புகளை மேற்கொள்ளவுள்ளது. இதில் 'டைகர் 3' படமும் ஒன்று. இந்தப் படத்தை இந்தி திரை உலகில் இதுவரை எடுக்கப்படாத பெரும் பட்ஜெட்டில் உருவாக்க யாஷ்ராஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் சல்மான்கானின் 'டைகர் 3' - டைகர் 3 பட அப்டேட்
மும்பை: சல்மான் கான் நடிப்பில் உருவாக உள்ள 'டைகர் 3' படத்திற்கு 300 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சல்மான் கான்
இப்படத்தின் தயாரிப்புக்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திலும் சல்மான்கானுடன் கத்ரினா கைஃப் நடிக்கிறார். டைகர் சீரிஸில் இப்படம் கடைசி என தெரிகிறது. இந்த படத்திற்கான கதை, திரைக்கதை பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
படத்தின் படப்பிடிப்பிற்காக ஏழு வெளிநாடுகளுக்கு படக்குழு செல்ல இருக்கிறது. அதுமட்டுமல்லாது அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமலும் இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.