ஹைதராபாத்: உலக அழகியாக பட்டம் வென்ற பிறகு, இயக்குநர் ஒருவர் தனது அழகை அட்ஜெஸ்ட் செய்ய சொன்னது பற்றி தனது வாழ்க்கை குறித்த அன்ஃபினிஷ்ட் என்ற புத்தகத்தில் விவரித்துள்ளார் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா.
இந்திய சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா தற்போது உலக அளவில் புகழ் பெற்ற நாயகியாக உருமாறியுள்ளார். இவர் தனது வாழ்க்கையை திரும்பிபார்க்கும் விதமாகவும் அன்ஃபினிஷ்ட் என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், உலக அழகியாக பட்டம் வென்ற பிறகு திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய காலத்தில் இயக்குநர் ஒருவர் எனது அழகை பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து அட்ஜெஸ்ட் செய்யுமாறு அறிவுறுத்தியது பற்றி எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரியங்கா கூறியிருப்பதாவது:
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான அவர் என்னிடம் சில நிமிடங்கள் பேசிய பிறகு, என்னை எழுந்து நின்று முழு அழகையும் பார்க்கும் விதமாக சுற்றி நிற்குமாறு சொன்னார். அதன்படி செய்தேன். பின்னர் என்னை கூர்ந்து பார்த்த அவர், கூடுதலாக அழகைப் பெற எனது உடலில் நான் செய்ய வேண்டிய அட்ஜெஸ்ட்மெண்டுகள் குறித்து தெரிவித்தார்.
எனது முன்னழகு, தாடை, பின்னழகு ஆகியவற்றை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றியமைத்து சரி செய்யுமாறு ஆலோசனை வழங்கினார் என்றார்.