அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி சேனலான என்.பி.சியில் 'தி வாய்ஸ்' என்னும் பாட்டு போட்டியின் 20ஆவது சீசனின் படப்பிடிப்பு லால் ஏஞ்சல்ஸில் நடைப்பெற்றது.
இதில் நடுவர்களாக பிரபல பாடகர்கள் பிளேக் ஷெல்டன், கெல்லி கிளார்க்சன், ஜான் லெஜண்ட் ஆகியோருடன் பாப் பாடகரும். நடிகருமான நிக் ஜோனாஸூம் உள்ளார்.
படப்பிடிப்பு நடைபெற்றப்போது ஏற்பட்ட விபத்தில், நிக் ஜோனாஸின் விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, "நான் நன்றாக உணர்கிறேன். நான் நன்றாக இருக்கிறேன். குணமாகி வருகிறேன். விரைவில் வீடு திரும்புவேன் என்று கூறியுள்ளார்.