தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அமெரிக்காவில் கறுப்பு சேலை கட்டிய பிரியங்கா சோப்ரா... காரணம் என்ன? - பிரியங்கா சோப்ரா

அமெரிக்க மருமகளான பிரியங்கா சோப்ரா கறுப்பு நிற புடைவையில் தோன்றியது பலரின் உருவங்களை உயர்த்தியுள்ளது.

Priyanka Chopra
Priyanka Chopra

By

Published : Mar 25, 2022, 1:28 PM IST

வாஷிங்டன் : ஆஸ்கர் விருதுக்கு முந்தைய கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில் நடிகைகள் விதவிதமான உடைகள் அணிந்து காணொலிகளை வெளியிட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா கறுப்பு புடைவை கட்டி காணொலி வெளியிட்டுள்ளார். இது பலரது உருவங்களையும் உயர்த்தியுள்ளது. இந்த வைரல் காணொலியில் நடிகை பிரியங்கா சோப்ரா, தெற்காசிய நாடான இந்தியாவில் பிறந்து ஹாலிவுட் படங்களில் நடித்தது குறித்து பேசுகிறார்.

மேலும், “நீங்கள் ஒவ்வொருவரும் சிறந்தவர்கள், உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் இங்கு இருக்கிறீர்கள். நான் 10ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்தேன். அமெரிக்காவில் வேலை பார்க்க ஆரம்பித்தேன். இன்று நானும் ஆஸ்கர் விருதுக்கு முந்தைய விழாவில் இருக்கிறேன்.

இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. என் சகாக்களை நினைத்து பெருமைக் கொள்கிறேன். உணர்ச்சிவசப்படுகிறேன்” என்றார். நடிகை பிரியங்கா சோப்ரா 2015ஆம் ஆண்டு ஹாலிவுட் சின்னத்திரை தொடரான குவாண்டிகா (Quantico) வில் நடித்தார். இது பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு ஹாலிவுட் ஆக்ஷன் காமெடி படமான பேவாட்ச் (Baywatch)சில் நடித்தார். தற்போது அவரின் நடிப்பில் என்டிங் திங்ஸ் (Ending Things), டெக்ஸ்டு பாஃர் யூ ('Text For You) மற்றும் சிடாடெல் (Citadel) உள்ளிட்ட ஆங்கிலத் சின்னத்திரை தொடர்கள் வெளியீட்டு காத்திருக்கின்றன.

இதற்கிடையில் பிரியங்கா சோப்ரா, ஸி லி ஸாரா ( Zee Le Zaraa) என்ற பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். ஃபர்கான் அக்தர் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கத்ரீனா கைஃப், ஆலியா பட் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பிரியங்கா சோப்ரா 2018ஆம் ஆண்டு அமெரிக்கரான நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க :வாடகைத்தாய் மூலம் பெற்றோரான பிரியங்கா - நிக் ஜோனஸ் தம்பதி!

ABOUT THE AUTHOR

...view details