சஞ்சய் லீலா பன்சாலியின் பிரமாண்ட இயக்கத்தில் ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பாஜிராவ் மஸ்தானி'. இத்திரைப்படம் நேற்றுடன் (டிச.18) வெளியாகி ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இதைத்தொடர்ந்து படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரியங்கா சோப்ரா, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் ஒன்றைப் பகிர்ந்தார். அதில், "காஷியின் மென்மையான வலிமையுடன் நல்ல அனுபவத்தின் நினைவுகளுடன் நாங்கள் பாஜிராவ் மஸ்தானியின் ஐந்தாண்டுகளைக் கொண்டாடுகிறோம்" எனக் குறிப்பிட்டார்.