தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சினிமாவுக்கு வந்தது எப்படி? - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த குறும்புத்தனமான வீடியோ - பிரியங்கா சோப்ரா படங்கள்

”இங்கிருந்துதான் அனைத்தும் தொடங்கின. இந்தப் புகைப்படங்களும், வீடியோக்களும்தான் என்னைத் திரைத்துறைக்கு அனுப்பி உங்கள் முன்னால் நிற்க வைத்தது” என்று தனது மாடலிங் தருணங்களை வீடியோவைப் பகிர்ந்து நினைவுகூர்ந்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.

Priyanka Chopra reacts to her Miss India pageant video
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா

By

Published : Jul 25, 2020, 12:05 PM IST

மும்பை:சினிமாவுக்கு வருவதற்குக் காரணமான மாடலிங் தருணங்களின் வீடியோக்களை நடிகை பிரியங்கா சோப்ரா நினைவுகூர்ந்துள்ளார்.

சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகளைப் பூர்த்திசெய்துள்ள பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தான் கடந்த வந்த பாதையை நினைவுகூரும் விதமாக வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அதில், ”இரண்டாயிரமாவது ஆண்டில் ’மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற வீடியோவைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். இங்கிருந்துதான் அனைத்தும் தொடங்கியது. நீங்கள் இதற்கு முன்னாள் இந்த வீடியோவைப் பார்க்கவில்லையென்றால், இதோ உங்களுக்கான சிறந்த விருந்தாக இது இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், முதல் முறையாக அழகி பட்டம் வென்றது முதல் உலக அழகியாக வாகை சூடியது வரை சினிமாவுக்கு வருவதற்குக் காரணமான சிறந்த 20 தருணங்கள் இடம்பிடித்துள்ளன. இந்த வீடியோவைப் பார்த்து தன்னைத்தானே விமர்சித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

போட்டோவுக்கு போஸ் கொடுத்திருப்பது, பேஷன் ஷோவில் ஸ்டைலாக நடந்து வந்தது, பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்த ஹேர் ஸ்டைல் என தனது நடை, உடை, பாவனைகள் என அனைத்தையும் குறும்புத்தனமாகப் பேசியுள்ளார்.

உலக அழகியாக வாகை சூடிய காட்சியைப் பார்த்தபோது, ”நான் உலக அழகிப்பட்டம் வெல்வேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அப்போது தேர்வெழுத செல்ல வேண்டும் என்பதற்காக ரயில் டிக்கெட் புக் செய்திருந்தேன்” என்று குறிப்பிட்டார்.

அதேபோல் மாடலிங்குக்கான போட்டோஷூட் புகைப்படங்களைப் பார்த்தபோது, ”எனக்கு எவ்வாறு போஸ் கொடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை. இதைப் பார்க்கையில் மிகவும் கடினமாக உள்ளது” என்று சிரித்தவாறே தெரிவித்துள்ளார்.

காணொலியின் இறுதியில், ”இங்கிருந்துதான் அனைத்தும் தொடங்கின. இந்தப் புகைப்படங்களும், வீடியோக்களும்தான் என்னைத் திரைத்துறைக்கு அனுப்பி உங்கள் முன்னால் நிற்க வைத்தது” என்று கூறியுள்ளார்.

பாலிவுட் சினிமாக்களில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரியங்கா சோப்ரா, தேசிய விருது, ஃபிலிம் பேர் விருது, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, சர்வதேச அளவிலான விருதுகள் ஆகியவற்றையும் வாங்கி குவித்துள்ளார்.

ஹாலிவுட் திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம்வரும் இவர், தற்போது கணவர் நிக் ஜோனஸுடன் அமெரிக்காவில் வசித்துவருகிறார்.

இதையும் படிங்க: 'திரைப் பயணத்தை சிறப்பித்த ரசிகர்களுக்கு நன்றி' - நடிகை ஸ்ருதி ஹாசன்!

ABOUT THE AUTHOR

...view details