எனக்கு ஆஸ்துமா... அவருக்கு நீரிழிவு... சுகாதார நெருக்கடியில் தற்காத்துக் கொள்ளும் பிரியங்கா! - நிக் ஜோனஸ் பாடல்கள்
மும்பை: கரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில், குடும்ப நிகழ்ச்சிகளில் தானும் நிக் ஜோனாஸும் அதிகம் கலந்து கொண்டதாக பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
உலகப் பெருந்தொற்று நோயான கரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலகளாவிய சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்தக் காலகட்டத்தை தானும், கணவர் நிக் ஜோனாஸும் எவ்வாறு சமாளித்து வருகின்றோம் என்பது குறித்து பிரியங்கா சோப்ரா தற்போது கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு படைப்பாற்றல் நபரான என்னை பொருத்தவரை இந்த தனிமைப்படுத்தலின் போது நிறைய திட்டங்கள் நிகழ்ந்தன. நான் புதிய நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் உருவாக்கி வருகிறேன். எனது சுயநினைவு குறிப்பை எழுதி முடித்துள்ளேன். இது முற்றிலும் விசித்திரமான ஒரு ஆக்கபூர்வமான நேரம்.
நான் ஆஸ்துமா நோயாளி, என் கணவர் டைப் 1 நீரிழிவு நோயாளி, எனவே நாங்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். எங்களுக்கு பெரிய நண்பர்கள் மற்றும் குடும்பக் குழு உள்ளது. சமீபத்தில் எனது குடும்பத்தின் நிறைய பிறந்தநாள் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நாங்கள் கலந்து கொண்டுள்ளோம். வீடியோ கால்கள் மூலம் குடும்பமாக இருந்து உணவருந்தி உள்ளோம். மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும் திறன் நம்மிடம் இருந்தால், நண்பர்கள் நமது குடும்பத்தினர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், நமக்கு இயல்பான உணர்வை தருகிறது என்று கூறினார்.