உலக அழகி பட்டம் வென்று, தமிழில் விஜய்க்கு ஜோடியாக 'தமிழன்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பின்னர் பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்து ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்.
பாலிவுட் திரையுலகில் டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தபோது 'குவான்டிகோ' என்ற ஹாலிவுட் டிவி தொடரில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றார் நடிகை பிரியங்கா சோப்ரா. இதைத்தொடரந்து அங்கு அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் அமைய ஹாலிவுட்டிலேயே செட்டிலாகிவிட்டார்.