இந்தாண்டு நடைப்பெறவிருக்கும் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (Toronto International Film Festival-TIFF) நடிகை பிரியங்கா சோப்ராவும், இயக்குநர் அனுராக் கஷ்யாப்பும் கலந்துகொள்ளவுள்ளனர்.
சுமார் 50 முக்கியத் திரை பிரபலங்கள் கலந்துகொள்ளும் இந்தத் திரைப்பட விழாவில் தூதர்களாகப் பங்குகொள்ள பிரியங்கா சோப்ராவும், இயக்குநர் அனுராக் கஷ்யாப்பும் அழைக்கப்பட்டுள்ளது பலரது எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.
செப்டம்பர் 10 முதல் 19ஆம் தேதிவரை நடக்கவிருக்கும் இந்தத் திரைப்பட விழாவில் கரோனா தொற்று காரணமாக திரைப்படங்கள் டிஜிட்டலாக காட்சிப்படுத்தப்படவுள்ளன.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற மார்ட்டின் ஸ்கோர்செஸி, அல்போன்சோ குரோன், ரியான் ஜான்சன், நிக்கோல் கிட்மேன் போன்ற திரை பிரபலங்களுடனும், ஆஸ்கர் விருது வென்றவர்களுடனும் பிரியங்கா சோப்ராவும், அனுராக் கஷ்யாப்பும் கலந்துகொள்ளவுள்ளனர்.
தகுந்த இடைவெளியுடன்கூடிய நிஜ திரையரங்குகளில் முதல் ஐந்து நாள்களுக்கு 50 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இதற்குச் சுகாதார அலுவலர்களின் ஒப்புதல் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக முதல்முறையாக டிஜிட்டல் தளத்தில் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. கேன்ஸ், ட்ரிபேக்கா போன்ற திரைப்பட விழாக்கள் கரோனா தொற்று காரணமாக ரத்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற ராதிகா ஆப்தே