தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விவசாயிகள்தான் இந்தியாவின் போர் வீரர்கள் - பிரியங்கா சோப்ரா - விவசாயிகளின் போராட்டத்திற்கு பிரியங்கா சோப்ரா ஆதரவு

விவசாயிகள்தான் இந்தியாவின் போர் வீரர்கள் என பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

Priayanka
Priayanka

By

Published : Dec 7, 2020, 4:38 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் ’டெல்லி சலோ’ போராட்டத்தை நடத்திவருகின்றனர்.

நவம்பர் மாதம் 26ஆம் தேதி இந்த போராட்டம் தொடங்கியபோது விவசாய போராட்டக் குழுக்களைக் கலைக்கவும், டெல்லி செல்வதைத் தடுக்கவும் காவல் துறையினர் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். மேலும், கண்ணீர் புகை குண்டுகளை வீசி, விவசாயிகளை விரட்ட முயன்று அது முடியாமல்போகவே காவல் துறையினர் தடியடி நடத்தினர். எனினும், டெல்லிக்கு செல்வதில் விவசாயிகள் உறுதியாக இருந்த நிலையில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதற்கு காவல் துறை அனுமதி அளித்திருந்தது.

இதனிடையே, இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக விவசாய குழுக்கள் - மத்திய அரசு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஐந்தாம் கட்டமாக நடைபெற்ற அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இதனையடுத்து விவசாயிகளுக்கு நாடு முழுவதும் உள்ள பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் திரை பிரபலங்களும் தங்ளது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில்,"நமது விவசாயிகள்தான் இந்தியாவின் போர் வீரர்கள். அவர்களது பயத்தைப் போக்கவேண்டும். அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும். ஜனநாயக நாடான நாம் இந்தப் பிரச்னை மிக விரைவில் சரி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details