பாலிவுட் நடிகையும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். இந்த நிலையில், தனது வீட்டின் அருகே விமானம் ஒன்று அவசரமாக சாலையில் தரையிறங்கியதைக் கண்டுள்ளார்.
அம்மாடியோவ்! வாழ்வில் ஒருமுறைகூட இப்படி பார்த்தது இல்லை: மிரண்ட ப்ரீத்தி ஜிந்தா - முதல் அனுபவத்தை பங்கு வைத்த ப்ரீத்தி ஜிந்தா
டெல்லி: சாலையில் விமானம் தரையிறங்கியதைக் கண்ட அனுபவத்தை நடிகை ப்ரீத்தி ஜிந்தா அவரது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதன் அனுபவம் குறித்து ப்ரீத்தி ஜிந்தா அவரது இன்ஸ்டாகிராமில், "எந்த ஒரு விசயமும் நமது வாழ்வில் முதல்முறை நிகழ்வது பிரமிப்பாகச் சிறப்பானதாக இருக்கும். அப்படி ஒரு விசயம் தற்போது நிகழ்ந்துள்ளது.
விமானம் ஒன்று சாலையில் அவசரமாகத் தரையிறங்கி உள்ளது. இதற்கு முன் இப்படி விமானம் சாலையில் தரையிறங்குவதைப் பார்த்தது இல்லை. என் வாழ்வில் முதல்முறையாகப் பார்த்துள்ளேன். கடவுளுக்கு நன்றி! இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.