ஹைதராபாத்:ராமாயணத்தை மையமாக கொண்டு 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ஆதிபுருஷ். இந்த படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். டி சீரிஸ் ஃபிலிம்ஸ் மற்றும் ரெட்ரோஃபில்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
பிரபாஸ் ராமனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடிக்கின்றனர். இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. பாகுபலி பாகங்களை விட ஆதிபுருஷின் கிராபிக்ஸ் மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்திய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரிலீசுக்கு காத்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "உலகம் முழுவதும் ஆதிபுருஷ் திரைப்படம் ஜனவரி 12, 2023 அன்று திரைக்கு வரும்" என்று பதிவிட்டுள்ளார். பொங்கல் விழாவை முன்னிட்டு, இந்த படம் வெளியிடப்படுவதால், ரசிகர்கள் கூடுதல் உற்சாகத்தில் உள்ளனர். முன்னதாக இந்த படம் 2022 ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை: கே.டி.குஞ்சுமோன் வருத்தம்