இந்திய சினிமாவில் தனக்கென தனித்த அடையாளத்தை பதித்தவர் ராம்கோபால் வர்மா. குறுகிய பட்ஜெட்டில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அவர் சினிமா வாழ்க்கையைத் தாண்டி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பிரபல நடிகர்கள் என்றும் பாராமல் அனைவரையும் ட்விட்டரில் சண்டைக்கு இழுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ராம் நடித்துள்ள 'இஸ்மார்ட் சங்கர்' படத்தின் வெற்றி விழா பிரபல பஃப்பில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பைக்கில் வந்த ராம்கோபால் வர்மா, ட்ரிபிள்ஸில் வந்து காவல்துறையினரிடம் சிக்கி 1,500 அபராதம் கட்டினார். இதனைத்தொடர்ந்து ’இஸ்மார்ட் சங்கர்’ வெற்றிவிழாவில் படத்தின் தயாரிப்பாளர் சார்மி கவுர், இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகைகள் நிதி அகர்வால், நஃபா நடேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது போதையில் இருந்த ராம்கோபால் வர்மாவை சார்மி கவுர் கட்டியணைத்து வாழ்த்துகளை பகிர்ந்தார். அப்போது ராம்கோபால் வர்மா அவருக்கு முத்தமிட்டார், பின்னர் நடிகைகள் நிதி அகர்வால், நஃபா நடேஷ் ஆகியோர் தலையில் பீரை ஊற்றினார்.