சமீபத்தில் சவுத்தாம்ப்டனில் முடிவடைந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தனது கணவர் விராட் கோலியுடன் இங்கிலாந்து சென்ற அனுஷ்கா ஷர்மா, நியூ லுக்குடன் இந்தியா திரும்பியுள்ளார்.
குழந்தைபேறுக்குப் பிறகு முடி உதிர்ந்த நிலையில், நடிகை அனுஷ்கா ஷர்மா லண்டனைச் சேர்ந்த பிரபல சிகை அலங்கார நிபுணர் ஜார்ஜ் நார்த் உட்டிடம் தனது முடியை வெட்டு அழகுபடுத்திக் கொண்டுள்ளார்.
பிரபல நடிகைகள் மேகன் மார்க்ல், அலெக்சா சுங், அலிசியா விகாண்டர் ஆகியோரின் சிகை அலங்கார நிபுணராக ஜார்ஜ் நார்த் உட் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது புதிய ஹேர் கட் படங்களை அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், தன்னை ஜார்ஜ் நார்த் உட்டிடம் அறிமுகப்படுத்திய சோனம் கபூருக்கு நன்றி தெரிவித்துள்ள அனுஷ்கா, ”குழந்தைப் பிறத்தலுக்குப் பிறகான முடி உதிர்தல் ஒரு நல்ல ஹேர்கட்டையும் இன்னும் பலவற்றையும் தருகிறது” என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தனது திருமண வாழ்வு, குழந்தை பிறப்புக்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி தயாரிப்பு பணிகளில் அனுஷ்கா ஷர்மா ஈடுபட்டு வரும் நிலையில், கிரிக்கெட் வீரர் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ப்ளாக் விடோ குறித்து மனம் திறந்த ஸ்கார்லெட் ஜொஹான்சன்