தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒருசில படங்களில் மட்டும் நடித்தவர் பூனம் பாண்டே. இவர் படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானதைவிட சமூகவலைதளத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி படங்களை வெளியிட்டு மிகவும் பிரபலமானர். நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த ரசிகர்களுக்கும் நெட்டிசன்களுக்கு பூனம் பாண்டே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு உற்சாகப்படுத்தினார்.
'உன்னுடன் வாழும் வாழ்க்கையை எதிர்நோக்கி உள்ளேன்' - காதலனை கரம் பிடித்த பூனம் பாண்டே
மும்பை: நடிகை பூனம் பாண்டே தனது காதலனுடன் திருமணம் செய்து கொண்டார்.
சமூகவலைதளத்தில் அவ்வப்போது கவர்ச்சி படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்த பூனம் பாண்டே, 'லவ் ரோபோட்' என்ற தலைப்பில் ஆடை இல்லாமல் முழு நிர்வாண வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார். பூனம் பாண்டே கடந்த இரண்டு வருடங்களாக சாம் பாம்பே என்பவரை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைதளத்தில் உலா வந்தன.
இருவருக்கும் ஜூலை மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது திருமணம் நடைபெற்றது. பூனம் பாண்டே திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, "இன்னும் ஏழு ஜென்மங்களும் உன்னுடன் வாழும் வாழ்க்கையை எதிர்நோக்கி உள்ளேன்" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு சாம் "கண்டிப்பாக திருமதி பாம்பே" என்று பதிலளித்துள்ளார்.