தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கிறிஸ்தவ சமூகத்தைப் புண்படுத்தியதாக நடிகை ரவீனா டண்டன் மீது வழக்கு

கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை புண்படுத்தியதாக ஆளவந்தான் படப் புகழ் ரவீனா டண்டன், பாலிவுட் இயக்குநர் ஃபாரா கான், நகைச்சுவை பிரபலம் பாரதி சிங் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Case against raveena Tandon
Bollywood actress Raveena tandon

By

Published : Dec 26, 2019, 7:48 PM IST

மும்பை: தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இயேசு குறித்து தவறான கருத்து தெரிவித்ததாக நடிகை ரவீனா டண்டன், பாலிவுட் இயக்குநர் ஃபாரா கான், நகைச்சுவை பிரபலம் பாரதி சிங் ஆகியோர் மீது பஞ்சாப் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து காவல் துறை துணை கண்காணிப்பாளர் சோகன் சிங், "ரவீனா டண்டன், ஃபாரா கான், பாரதி சிங் ஆகியோர் மீது புகார் வந்தது. இதன் அடிப்படையில் இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 295ஏ (மத உணர்வுகளைப் புண்படுத்துவது, மத நம்பிக்கை பற்றி தவறாகப் பேசுவது) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது" எனத் தெரிவித்தார்.

ஃபாரா கானின் யூ-ட்யூப் காமெடி ஷோ நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தபோது கிறிஸ்தவ சமூகம் பற்றி தவறான கருத்துகளைத் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழில் அர்ஜுன் ஜோடியாக சாது படத்திலும், கமல்ஹாசன் ஜோடியாக ஆளவந்தான் படத்திலும் நடித்தவர் ரவீனா டண்டன். தற்போது கன்னடத்தில் சூப்பர்ஹிட்டான கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துவருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details