பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘பிஎம் நரேந்திர மோடி’ . இந்த படத்தை சந்தீப் சிங்க் தயாரிப்பில் ஒமங் குமார் இயக்கியுள்ளார். இதில் பிரதமர் நரேந்திர மோடியாக விவேக் ஓபராய் நடித்தார்.
‘பிஎம் நரேந்திர மோடி’ திரைப்படம் ஏப்ரல் 5-ல் வெளியாகிறது! - 'PM Narendra Modi' movie big screens on April 5
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘பிஎம் நரேந்திர மோடி’ வரும் 5 ஆம் தேதி வெளியாகிறது.
pm
படத்தில் பிரதமர் நரேந்திர மோடி டீக்கடைக்காரராக ஆர்எஸ்எஸ் தொண்டாராக, குஜராத்தின் முதல்வராக, நாட்டின் பிரதமராக என பல பரிணாமங்களில் பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்க தான் சிரமப்பட்டதாக விவேக் ஓபராய் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பி.எம் நரேந்திர மோடி படம் ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பட்டது. ஆனால் தற்போது அந்த தேதியை படக்குழு மாற்றியுள்ளது. படம் வரும் 5 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு மீண்டும் அறிவித்துள்ளது.