தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வரலாறு மறைக்கப்பட்டதாக 'தன்ஹாஜி' படம் மீது வழக்கு - தனாஜி மாலுசாரேயின் வாழ்க்கை வரலாறு

வரலாறு மறைக்கப்பட்டதாகக் கூறி அஜய் தேவ்கான் நடிக்கும் 'தன்ஹாஜி' திரைப்படம் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை டிசம்பர் 19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Tanhaji
Tanhaji

By

Published : Dec 14, 2019, 8:45 AM IST

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், சாய்ஃப் அலி கான், கஜோல் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கும் படம் 'தன்ஹாஜி'. மராட்டியப் பேரரசில் ராணுவ தலைமைப் பொறுப்பு வகித்த தனாஜி மாலுசாரேயின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு உருவாகிவரும் இந்தப்படத்தை பிரபல இயக்குநர் ஓம் ராவத் இயக்குகிறார்.

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் போர்ப்படையில் இணைந்து அவருடன் பல போர்களில் ஈடுபட்ட தனாஜியின் வாழ்க்கை வரலாற்றை கதைக்களமாக கொண்டு பிரம்மாண்ட பொருட்செலவில் இந்தப்படம் உருவாகியுள்ளது.

அஜய் தேவ்கான் நடிக்கும் 'தன்ஹாஜி'

இந்த நிலையில், 'தன்ஹாஜி' படத்தில் தனாஜி மலுசேரின் உண்மையான பரம்பரை வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாகக்கூறி அகில பாரதிய ஷத்ரிய கோலி ராஜ்புத் சங்கத்தினர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், இயக்குனர் ஓம் ராவத் திரைப்படத்தில் சிறந்த போர்வீரரான தனாஜி மாலுசாரேவின் உண்மையான பரம்பரை வரலாற்றை மறைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் இப்படத்தை தடை செய்யவேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளது.

இந்த வழக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்ற விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், நீதிபதி விடுப்பு எடுத்ததன் காரணமாக வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுப் படம் மீதான வழக்கு படவெளியீட்டை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், படக்குழுவினர் அனைவரும் வரும் 19ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க...

விஜய்க்காக எழுதப்பட்ட கதையில் நடிக்கிறாரா ரஜினி?

ABOUT THE AUTHOR

...view details