தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அனைத்துப் பெண்களுக்கும் பெருமைமிகு தருணம் - கமலா ஹாரிஸுக்கு ப்ரியங்கா சோப்ரா வாழ்த்து! - கமலா ஹாரிஸ்

மும்பை: அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு நடிகை ப்ரியங்கா சோப்ரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா

By

Published : Aug 12, 2020, 10:44 PM IST

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் துணை அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்துக்கொண்டே இருந்தது.

இந்நிலையில், வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஜோ பிடன் இன்று (ஆகஸ்ட் 12) துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் என்பவர் போட்டியிடுவார் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து பல்வேறு தரப்பினர் அவருக்கு சமூக வலைதளங்கள் வழியாக வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கலிபோர்னியா மாகாணத்தின் செனட்டராக பதவி வகித்துவரும் கமலா ஹாரிஸ், தமிழ்நாட்டைச் சேர்ந்த புற்றுநோய் ஆராய்ச்சியாளர் ஷியாமளா கோபாலனுக்கும், ஜமைக்காவைச் சேர்ந்த டொனால்ட் ஹாரிஸுக்கும் கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் பிறந்தவராவார். துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலாவுக்கு நடிகை ப்ரியங்கா சோப்ரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து வெள்ளை, கருப்பு நிற பெண்கள், அனைத்து தெற்காசிய பெண்களுக்கு ஒரு வரலாற்று, மாற்றத்தக்க பெருமைமிக்க தருணம். பெரிய யு.எஸ். கட்சியின் ஜனாதிபதி டிக்கெட்டில் போட்டியிடும் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை கமலாஹாரிஸ் பெறுகிறார். நாங்கள் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்று என் இளைய சமூகமே பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details