இந்தி தொலைக்காட்சியில் 2015ஆம் ஆண்டு முதல் 'நாகின்' என்னும் தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த தொடர் வெற்றியடைந்தையடுத்து 2,3,4,5 என அடுத்தடுத்து பாகங்களாக எடுக்கப்பட்டு ஒளிப்பரப்பபட்டது. இந்த தொடர் தமிழில் 'நாகினி' என டப் செய்ப்பட்டு ஒளிப்பரப்பட்டு வருகிறது. இதற்கு தமிழிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகர் போக்சோவில் கைது - நாகினி தொடர் நடிகர் கைது
மும்பை: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகர் பேர்ல் வி புரியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
'நாகின் 3 'ஆவது பாகத்தில் கதாநாயகனாக நடித்தவர் பேர்ல் வி புரி. இவர் இந்தியில் பல தொடரில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர். சினிமா வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்து ஏமாற்றியதாக பேர்ல் வி புரி மீது மும்பை காவல்துறையில் 17 வயது சிறுமி புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், நடிகர் பேர்ல் வி புரியை போக்சோ சட்டத்தின் கீழ் செய்தனர். பின்னர் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.