பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் மீது சில நாள்களுக்கு முன்பு நடிகை பயால் கோஷ் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதுதொடர்பாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் அனுராக்கிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
இதையடுத்து, நடிகை பயால் கோஷ் மும்பை, வெர்ஸோவா காவல் நிலையத்தில் இயக்குநர் அனுராக் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார். தொடர்ந்து அனுராக் காஷ்யப், பயால் தொடுத்த வழக்குத் தொடர்பாக வெர்ஸோவா காவல் நிலையத்தில் விசாரணைக்காக முன்னிலையானார்.
தற்போது பயால் கோஷ் இந்தியாவில் மீ டூ இயக்கம் போலியானது என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது மீ டூ இயக்கத்தின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
இது குறித்து பயால் கோஷ் மேலும் கூறுகையில், "இந்தியாவில் மீ டூ இயக்கத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சுத்தமானவர்கள். குற்றஞ்சாட்டியவர்கள் பொய்யர்கள் என நான் கருதுகிறேன். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் புகார் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அவர்கள் ஏன் இன்னும் தண்டிக்கப்படவில்லை? உண்மைகள் காற்றில் பறந்துவிட்டனவா?
இந்தியாவில் மீ டூ இயக்கம் போலியானது - பயால் கோஷ் - அனுராக் காஷ்யப் வழக்கு
மும்பை: இந்தியாவில் மீ டூ இயக்கம் போலியானது என்று நடிகை பயால் கோஷ் தெரிவித்துள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பெண்களின் நிலைமை குறித்து எனக்குத் தெரியாது. குற்றஞ்சாட்டப்பட்டவர், இதுபோன்ற செயல்களில் ஒருபோதும் ஈடுபட்டிருக்க மாட்டார் எனக் கூறும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
இது பாலியல் வன்புணர்வுசெய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கும் தனது கணவர் ஒரு நிரபராதி என மனைவி கூறுவதைப் போன்றது" என்றார்.
மேலும், இந்த அமைப்பின் மூலம் புகார் அளித்தவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளதா? என கேள்வி எழுப்பினார். இது குறித்து தனது கருத்தை பயால் கோஷ் #fake, #Metooindia உடன் ஹேஷ்டேக்குகளுடன் பகிர்ந்துகொண்டார்.