பெண்கள் முன்னேற்றம் குறித்து டாக்டர் இதி சமந்தா எழுதிய ’ஜதா பரே சூர்யா’ (Jhada Pare Surya) கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் ‘கிராந்திதாரா’ (Krantidhara). ஹிமன்சு கதுவா இயக்கிய இப்படத்தில் சமரேஷ் ரவுத்ரே, கார்கி மொகந்தி, டெபாசிஸ் பத்ரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
#Krantidhara - ஒடியா திரைப்படத்துக்கு ‘ஏசியன் எக்சலென்ஸ் விருது’ - ஏசியன் எக்சலென்ஸ் விருது
ஹிமன்சு கதுவா இயக்கத்தில் உருவான ‘கிராந்திதாரா’ படத்துக்கு சியோல் சர்வதேச திரைப்பட விழாவில் ஏசியன் எக்சலென்ஸ் விருது (Asian Excellence Award) பெற்றுள்ளது.
![#Krantidhara - ஒடியா திரைப்படத்துக்கு ‘ஏசியன் எக்சலென்ஸ் விருது’](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4517149-590-4517149-1569137348711.jpg)
Krantidhara got Asian Excellence Award
2016 பிப்ரவரி 19ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் சியோல் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்தப் படத்தை ரசித்த நடுவர் குழு, ஏசியன் எக்சலென்ஸ் விருது (Asian Excellence Award) வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.