'நோ டைம் டூ டை' ட்ரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு
டேனியல் கிராக் நடிப்பில் உருவாகி உள்ள 'நோ டைம் டூ டை' படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஹாலிவுட்டில் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் சீரிஸில் 25ஆவது படமான 'நோ டைம் டூ டை' எனப்படும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம், இங்கிலாந்தில் நவம்பர் 12ஆம் தேதியும் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் ஜேம்ஸ் பாண்டாக ஐந்தாவது முறையாக டேனியல் க்ரேய்க் நடித்துள்ளார்.
தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் நாளை (செப்டம்பர் 3) வெளியாக உள்ளது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை அடுத்து ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.