தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கங்கனாவின் பழைய பேட்டியை பகிர்ந்து கலாய்த்த டாப்ஸி - கங்கனா - டாப்ஸி விவகாரம்

ஒத்துக்கீடு முறையால் நிகழும் தவறுகளை கங்கனாவின் புரிதலுக்கே விட்டு விடுவதாக நடிகை டாப்ஸி, அவரை பழைய பேட்டி வீடியோவை பகிர்ந்து சாடியுள்ளார்.

kangana
kangana

By

Published : Jul 22, 2020, 2:52 PM IST

மும்பை: வாரிசு நடிகர்களுக்கான வாய்ப்பு குறித்து கங்கனா பேசிய பழைய வீடியோவை பகிர்ந்து அவரை கிண்டலடித்துள்ளார் டாப்ஸி.

பாலிவுட் நடிகைகள் கங்கனா - டாப்ஸி இடையேயான வார்த்தைப் போர் முற்றியுள்ள நிலையில், இந்தி சினிமா துறையில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. டாப்ஸி அழகாக இருந்தும் பி கிரேட் நடிகையாக இருப்பதாக கூறினார் கங்கனா. அத்துடன் பாலிவுட்டின் வாரிசு கலாசாரத்துக்கு இடையே குரல் கொடுக்க அஞ்சுவதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலடி கொடுத்த டாப்ஸி, கங்கனா சொல்லும் ஆள்களை சார்ந்து நான் பிழைக்கவில்லை என்று பதிலடி கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது ட்விட்டரில் பிரபல பத்திரிகையாளர் பகிர்ந்திருந்த கங்கனாவின் பழைய பேட்டி ஒன்றை ரீட்விட் செய்துள்ளார் டாப்ஸி. அதில், இதெல்லாம் ஒத்துக்கீடு முறையால் நிகழும் தவறு. நீங்கள் சொல்லும் பாணியில் புரிந்துகொள்வது எளிது. நீங்கள் குறிப்பிட்டதுபோல் யார் பிரதேசத்தில் நன்மை இருக்கிறது என்பதை உங்களது புரிதலுக்கே விட்டுவிடுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

2010இல் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் பேசியுள்ள கங்கனா, "வாரிசு நட்சத்திரங்களுக்கு இருக்கும் சலுகை போல் எனக்கும் சிறுவயதில் இருந்துள்ளது. ஏனென்றால் எனது தாத்தா ஐஏஎஸ் அலுவலராகவும், தாய் ஆசிரியையாகவும், தந்தை பிரபல தொழிலதிபராகவும், கொள்ளு தாத்தா சுதந்திர போராட்ட தியாகியாகவும் இருந்துள்ளனர். ஆனால் இந்த விஷயத்தை நான் ஒருபோதும் பேசியதில்லை. ஆகவே வாரிசுகளுக்கான சலுகை குறித்த பேச்சு எழும்போது இதை எனக்காக பயன்படுத்த வேண்டும் என்று எண்ணியதில்லை" என்று கூறியுள்ளார்.

ஆனால், கங்கனாவை விமர்சித்ததற்காக என்னை சாடிய அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்க குழுவினர் இந்த வீடியோவை பகிர்வதற்கான வாய்ப்பை வேறு வழியின்றி ஏற்படுத்தியுள்ளனர் என்று மேற்கூறிய வீடியோவை பகிர்ந்துள்ள பத்திரிகையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்டோரும் பகிர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: சொந்த பகைக்கு மற்றவர் சாவை பயன்படுத்துகிறார் கங்கனா - டாப்ஸி

ABOUT THE AUTHOR

...view details