தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கத்தி பட வில்லனின் 'பைபாஸ் ரோடு' - போஸ்டர் வெளியீடு - நீல் நிதின் முகேஷ்

கத்தி பட வில்லன் நடிகர் நீல் நிதின் முகேஷ் தனது புதிய படத்தின் போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Neil Nitin Mukesh

By

Published : Oct 22, 2019, 11:20 AM IST

கத்தி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பிரபல நடிகர் நீல் நிதின் முகேஷ். கத்தி திரைப்படத்தில் கார்ப்பரேட் வில்லனாக அவதாரம் எடுத்திருந்த இவர், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பாகுபலி நடிகர் பிரபாஸின் சாஹோ திரைப்படத்திலும் அஷோக் என்ற கதாபாத்திரத்தை ஏற்று இவர் நடித்திருந்தார்.

இதனிடையே பைபாஸ் ரோடு என்ற கிரைம் திரில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவரது இளைய சகோதரர் நமன் நிதின் முகேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் நீல் நிதின் மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார். இந்தப் படம் வரும் நவம்பர் 1ஆம் தேதி திரைக்கு வருகிறது.

பைபாஸ் ரோடு போஸ்டர் வெளியீடு

தற்போது இந்தப் படத்திற்கான புதிய போஸ்டர் ஒன்றை நீல் நிதின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு இரவு, ஒரு முகமூடி, ஒரு குறிக்கோள்... இதன் பின்னால் இருப்பது யார்? என்ற கேள்வியை குறிப்பிட்டு போஸ்டர் பதிவிடப்பட்டுள்ளது. அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க...

பாத்ரூமுக்குள்ளேயே படமாக்கப்பட்ட ‘ரூம்’!

ABOUT THE AUTHOR

...view details