தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நவாஸுதின் சித்திக்கின் மனைவி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் - நவாஸுதின் சித்திக் விவாகரத்து

பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக்கின் மனைவி ஆலியா, நவாஸுதின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மனைவி ஆலியாவுடன் நவாஸுதின் சித்திக்
மனைவி ஆலியாவுடன் நவாஸுதின் சித்திக்

By

Published : May 19, 2020, 10:30 AM IST

சேக்ரட் கேம்ஸ், கேங்ஸ் ஆஃப் வஸேபூர், தலாஷ், மேண்டோ, லன்ச் பாக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள், இணையத் தொடர்கள் மூலம் தன் தனித்துவ நடிப்பால் சிறந்து விளங்கி, பாலிவுட் தாண்டி எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டிருப்பவர் நவாஸுதின் சித்திக்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக ’பேட்ட’ படத்தில் நடித்திருந்த இவர், தற்போது ரம்ஜான் கொண்டாட தன் சொந்த ஊருக்கு பயணித்ததைத் தொடர்ந்து அங்கே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது நவாஸுதினின் மனைவி ஆலியாம் நவாஸுதின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விவாகரத்துக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ஆலியாவின் வழக்கறிஞர், கடந்த மே ஏழாம் தேதி மின்னஞ்சல் மூலம் விவாகாரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், நவாஸுதின் இதற்கு இன்னும் எவ்வித எதிர்வினையும் ஆற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ஆலியா, விவாகரத்து கோருவதற்கு ஒரு காரணத்தை குறிப்பிட்டு சொல்ல முடியாது, பல காரணங்கள் உள்ளன என்றும், அவை அனைத்துமே தீவிரமான பிரச்னைகள் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு நவாஸுதினும் ஆலியாவும் திருமணம் செய்துகொண்ட நிலையில், தான் திருமணம் ஆகி ஒரு ஆண்டு கடந்தது முதலே இந்தப் பிரச்னைகளை சந்தித்து வருவதாகவும், ஆனால் தற்போது விஷயம் கைமீறி சென்றுவிட்டதாகவும் ஆலியா கூறியுள்ளார்.

நவாஸுதின் - ஆலியா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெறவிருந்ததாக செய்திகள் வெளியானதும் பின் மறுப்பு தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :சொந்த ஊரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நவாஸுதின் சித்திக்

ABOUT THE AUTHOR

...view details