சேக்ரட் கேம்ஸ், கேங்ஸ் ஆஃப் வஸேபூர், தலாஷ், மேண்டோ, லன்ச் பாக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள், இணையத் தொடர்கள் மூலம் தன் தனித்துவ நடிப்பால் சிறந்து விளங்கி, பாலிவுட் தாண்டி எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டிருப்பவர் நவாஸுதின் சித்திக்.
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக ’பேட்ட’ படத்தில் நடித்திருந்த இவர், தற்போது தன் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிவரும் நிலையில், விரைவில் வரவிருக்கும் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட, முறையாக விண்ணப்பித்து நவாஸுதின் தன் குடும்பத்துடன், சொந்த ஊரான புதனா நகரை சென்றடைந்துள்ளார்.
மேலும் பயணத்திற்கு முன் நவாஸூதின், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்று இல்லாதது உறுதி செய்யப்பட்ட பின்பே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், சொந்த ஊரான புதனா நகரை அடைந்துள்ள நவாஸுதின், 14 நாள்கள் அவரது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க :கணவருடன் பங்குபெற்ற முதல் கேன்ஸ் விழா : நினைவுகூர்ந்த உலக அழகி