'பேட்ட' படத்தில் சிங்காரம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் அறியப்படுபவர் நவாசுதீன் சித்திக். இவர் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் ஆவார். வங்கதேச இயக்குநர் முஸ்தபா சர்வார் ஃபரூகி இயக்கத்தில் உருவாகி வரும் 'No Land's Man' என்ற படத்தில் நவாசுதீன் நடித்து வருகிறார்.
நீண்டகாலமாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நவாசுதீனின் தங்கை சியாமா, சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவர் இறந்த செய்தி கேட்டபோது நவாசுதீன் படப்பிடிப்பு தளத்தில் இருந்துள்ளார். சிறிது நேரம் கலக்கமாக இருந்த நவாஸ், படப்பிடிப்பை சிறப்பாக முடித்துக் கொடுத்துவிட்டு, தன் ஊருக்குச் சென்றிருக்கிறார். அதன்பிறகு தான் இயக்குநருக்கு நவாசுதீனின் தங்கை இறந்த செய்தி தெரிந்திருக்கிறது.