உங்கள் அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி - அமிதாப் பச்சன் - அமிதாப்பச்சனுக்கு கரோனா
மும்பை: கரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு சமீபத்தில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவரைத்தொடர்ந்து, அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஷ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் கரோனா இருப்பது உறுதியானது.
மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் பச்சனும் அவரது குடும்பத்தினரும் விரைவில் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மருத்துவமனையில் இருக்கும் அமிதாப்பும் அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டு வருகிறார்.