தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜான் ஆப்ரஹாமின் 'மும்பை சாகா' - ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு - 'மும்பை சாகா' - ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம் நடிக்கும் 'மும்பை சாகா' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Mumbai Saga
Mumbai Saga

By

Published : Jan 14, 2020, 9:40 AM IST

பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் இயக்குநர் சஞ்சய் குப்தா இயக்கும் படம் 'மும்பை சாகா'. மும்பை அன்டர்வேர்ல்டு டானாக இருந்து காவல் துறைக்குச் சவாலாக விளங்கிய மான்யா சர்வ் என்ற தாதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் இம்ரான் ஹாஸ்மி, காஜல் அகர்வால், ஜாக்கி ஷெராஃப், சுனில் ஷெட்டி, பிரதீக் பாபர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

முழு நீள கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படத்தில் ஜான் ஆப்ரஹாம், மான்யா சர்வ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டி சீரிஸ், ஒயிட் ஃபெதர் பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்திற்கு தனிஷ்க் பக்சி, மிதூன், சாச்சர் பரம்பரா, சந்தீப் ஷிரோத்கர் ஆகியோர் இசையமைக்கின்றனர். அயநான்கா போஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜான் ஆப்ரஹாமின் 'மும்பை சாகா'

70 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மும்பை தாதாவாக ஜான் ஆப்ரஹாமின் மிரட்டலான புகைப்படத்துடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. குர்தா உடை, கழுத்தில் சங்கிலி, மோதிரங்கள், நெற்றியில் செந்தூரத் திலகம் உள்ளிட்டவற்றுடன் மாறுபட்ட தோற்றத்தில் அமர்ந்திருக்கும் ஜான் ஆப்ரஹாமின் இந்தப் புதிய லுக் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க...

ஆக்‌ஷன் வீடியோவுடன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்த சோனாக்‌ஷி

ABOUT THE AUTHOR

...view details